உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொது நல அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்

பொது நல அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி : பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் பொது நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அண்ணாதுரை சிலை அருகே நடந்தி ஆர்ப்பாட்டத்திற்கு நேரு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். புதுச்சேரி, காரைக்கலை சேர்ந்த பல்வேறு பொது நல அமைப்பினர் மற்றும் போராட்டக் குழுவினர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். யு.ஜி.சி., பல்கலைக்கழக மானியக்குழு 2015 விதிகளின்படி பாலியல், சாதி பாலின புகார்களை விசாரிக்க குழு அமைக்க வேண்டும். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பல்கலைக் கழக வளாகத்தில் நடந்ததாக கூறப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் மீது கவர்னர் கைலாஷ்நாதன் உரிய விசாரணை நடத்திட ஆணை பிறப்பிக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !