உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பிரெஞ்சு மொழியில் திருவாசகம் வெளியீடு 

 பிரெஞ்சு மொழியில் திருவாசகம் வெளியீடு 

புதுச்சேரி: மகா சிவராத்திரியையொட்டி, பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் மாணிக்கவாசகரின் திருவாசகம் பிரெஞ்சு மொழியில் வெளியிடப்பட்டது. புதுச்சேரியை சேர்ந்தவர் ரகுநாத் மனே; புகழ்பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர், வீணை கலைஞர், இசையமைப்பாளர், திரைப்பட தயாரிப்பாளர், எழுத்தாளர் என, பன்முகம் கொண்டவர். இவர், இந்தியாவிற்கும் பிரான்சுக்கும் இடையிலான கலாசார பாலமாக விளங்கியதால், பிரான்ஸ் அரசின் செவாலியே விருது பெற்றார். அவர் திருவாசகத்தை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்துள்ளார். அதையடுத்து மகா சிவராத்திரியையொட்டி, பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் மாணிக்கவாசகரின் திருவாசகம் நேற்று வெளியிடப்பட்டது. இதனை பிரெஞ்சு ஆய்வு நிறுவன இயக்குனர் ரெனாட் கோல்சன் வெளியிட்டார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பாதிரியார் ஜி.யு. போப் திருவாசகத்தை ஆங்கிலத்தில் முதன் முதலில் 1990ல் மொழிபெயர்த்துள்ளார். தற்போது ரகுநாத் மனே பிரெஞ்சில் மொழிபெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை