உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மளிகைக் கடைக்காரரை தாக்கிய ரவுடிக்கு வலை

மளிகைக் கடைக்காரரை தாக்கிய ரவுடிக்கு வலை

காரைக்கால் : காரைக்காலில் கடன் தர மறுத்த மளிகை கடைக்காரரை தாக்கிய ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.காரைக்கால் நெடுங்காடு பண்டாரவாடை நல்லாத்தூர் சாலையைச் சேர்ந்த வில்வமங்களம், 38. மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடைக்கு வந்த குரும்பகரம் கன்னிக்கோவில் வீதியைச் சேர்ந்த ரவுடி மொட்டையன்(எ) முருகன், 35, கடன்கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த ரவுடி மொட்டையன், மளிகை கடைக்காரரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்த புகாரின் பேரில் நெடுங்காடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்குப் பதிந்து, ரவுடியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி