உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி பா.ஜ., தலைமை மாற்றம்; உறுதி வரும் 16ல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

புதுச்சேரி பா.ஜ., தலைமை மாற்றம்; உறுதி வரும் 16ல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

புதுச்சேரி : தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி பா.ஜ., தலைமை மாற்றம் உறுதியாகி உள்ளது.கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க., தலைமையிலும், புதுச்சேரியில் என்.ஆர்.காங்., தலைமையிலும் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிட்டன. அத்தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தோல்வியடைந்தது. புதுச்சேரியில் இக்கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது.இந்நிலையில் தமிழக பா.ஜ., தலைமையுடன் ஏற்பட்ட உரசல் காரணமாக கூட்டணி உடைந்தது. இரு கட்சிகளும் கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலை தனித்து களம் இறங்கின. அதில், இரு கட்சிகளும் தோல்வி அடைந்தன.இதனால், இரு கட்சி யிலும் இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கூட்டணியை விரும்பினர். அதையே பா.ஜ., மேலிட தலைமையும் விரும்பியது. ஆனால், அ.தி.மு.க., பழனிசாமி, பா.ஜ., தமிழக தலைமையை மாற்றினால் மட்டுமே கூட்டணிக்கு சாத்தியம் என்பதில் உறுதியாக இருந்தார்.அதனையொட்டி பா.ஜ., மேலிட தலைமை, கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தமிழக தலைமையை மாற்ற ஓப்புக் கொண்டதை தொடர்ந்து மீண்டும் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. மேலும், தமிழக பா.ஜ., தலைமையும் நேற்று மாற்றப்பட்டது.அதேபோன்று , புதுச்சேரியிலும், பா.ஜ., தலைமையை மாற்ற கட்சி மேலிடம் முடிவு செய்தது. அதனையொட்டி, கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு, தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் செல்வகணபதி உள்ளிட்ட நான்கு பேரை தேர்வு செய்திருந்தது.இந்நிலையில், மாநிலத்தில் கட்சியை பலப்படுத்திட, கட்சியின் சீனியரான தற்போதைய தலைவரை, மத்திய அமைச்சராக்கவும், தலைவர் பதவியை ஏற்கனவே தேர்வு செய்த பட்டி யலில் உள்ள மூவரில் ஒருவருக்கு வழங்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு வரும் 16ம் தேதி வெளியாகும் என கட்சி வட்டராத்தில் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை