புதுச்சேரி: அசாம் மாநிலத்தில் ந டந்த சர்வதேச மாநாட்டில் புதுச்சேரியைச் சேர்ந்த குழுவினர் பங்கேற்று நேற்று புதுச்சேரி திரும்பினர். அசாம் மாநிலம் கோலாகாட்டில் உள்ள தியோபரில் சர்வதேச அளவிலான பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சுற்றுலா வளர்ச்சி மாநாடு கடந்த 31ம் தேதி துவங்கி நடந்தது. மாநாட்டில், நாகாலாந்து, அசாம், அருணாச்சல் பிரதேஷ், அரியானா, மேற்கு வங்காளம், டெல்லி, ஒரிசா,புதுச்சேரி, உள்ளிட்ட 18 மாநிலங்களிலிருந்து இந்திய பிரதிநிதிகளும், லிபியா, ஜார்ஜியா, டான்சானியா, வியட்நாம், பங்களாதேஷ் உள்ளிட்ட 15 நாட்டு பிரதிநிதிகளும் பங்கேற்றனர். தியோபகர் தேயிலை தோட்டத்தில் அசாம் கலாச்சார முறைப்படி ஜூம்கர் அசாம் நடன நிகழ்ச்சிகளுடன் அனைவருக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டு, பருவநிலை மாற்றம் சுற்றுச்சூழல் குறி த்து ஓவிய முகாம் நடத்தப்பட்டது. இந்த சர்வதேச மாநாட்டில் இந்தியாவின் சார்பில் புதுச்சேரியில் இருந்து தெற்காசிய கூட்டமைப்பின் தலைவரும் சமூக சேவைக்கான மத்திய அரசின் தேசிய விருது பெற்ற பிரதமரிடம் வ ருமான் ஆதவன் தலைமையில் புதுச்சேரி பல்கலைக்கழக முனைவர். அரங்க முருகையன், லிங்கா ரெட்டிப்பாளையம் பாஸ்கோ பள்ளி ஆசிரியர் சிவபெருமான், தேசிய இளைஞர் திட்டத்தின் மாநில மகளிர் அணி தலைவி ஜெயப்பிரதா, சமூக ஆர்வலர் இசையமுது, ஆசிரியை மகாலட்சுமி உள்ளிட்ட 6 பேர் பங்கேற்றனர். மாநாட்டில், அசாம் பல்கலைக்கழக துணைவேந்தர் அசோக்குமார் போரா, அசாம் சமூக வளர்ச்சி இயக்கத்தின் பொதுச்செயலாளர் கிருபாஜோதி போரா, சுப்ரதா, சங்ராம் உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். ஆதவன் தலைமையில் அசாம் சென்றிருந்த குழுவினர் நேற்று புதுச்சேரி திரும்பினர்.