உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரவாணிகளுக்கு நல வாரியம்: முதல்வரிடம் கோரிக்கை மனு

அரவாணிகளுக்கு நல வாரியம்: முதல்வரிடம் கோரிக்கை மனு

புதுச்சேரி : அரவாணிகளுக்கு நல வாரியம் அமைக்க வேண்டுமென சகோதரன் நல மேம்பாட்டு அமைப்பினர் முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். சகோதரன் நல மேம்பாட்டு அமைப்பைச் சேர்ந்த சீத்தல் தலைமையில் நிர்வாகிகள் நேற்று முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து கொடுத்த கோரிக்கை மனு: எங்கள் அமைப்பு கடந்த 98ம் ஆண்டிலிருந்து பெண் மனம் படைத்த (ஓரின சேர்க்கையாளர்கள்) ஆண்கள் மற்றும் அரவாணிகள் நலனுக்காக செயல்பட்டு வருகிறது. எங்களுக்கும் மற்றவர்களுக்கு உள்ள உரிமைகள் வேண்டும். தமிழகத் தில் அரவாணிகளுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்கிறது. இதே போல் புதுச்சேரியில் வாழ்பவர்களுக்கும் உரிமைகள் கிடைக்க வேண்டும். புதுச்சேரியில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பெண் மனம் படைத்தவர்களின் எண்ணிக்கை 898 ஆகவும், அரவாணிகள் 102 பேரும் உள்ளனர். இவர்களுக்கு மனிதனுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை எதுவும் கிடைக்கவில்லை. எங்களுக்கும் மற்ற எல்லோருக்கும் கிடைக்கும் அடிப்படை உரிமைகள் வழங்க வேண்டும். சமுதாயத்தில் எங்களுக்கும் அடையாளம் வேண்டும். இதற்காக அரவாணிகள் நல வாரியம், அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுரிமை, இலவச மனைப்பட்டா, வேலை வாய்ப்பு, மாத உதவித்தொகை, இலவச பஸ் பாஸ், படிக்கும் அரவாணிகளுக்கு ஊக்க தொகை ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்ஜெட் கூட்டத்தொடரின் போதே எங்களுக்குச் சிறப்பு சலுகைகளை அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை