உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி சிறுமி சென்னையில் மீட்பு

புதுச்சேரி சிறுமி சென்னையில் மீட்பு

வில்லியனுார்: வில்லியனுார் அருகே தாய் கண்டித்ததால் வீட்டில் இருந்து மாயமான சிறுமியை சென்னையில் மீட்டனர். வில்லியனுார் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. 8ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று (நவ.,19) அவரை தாய் கண்டித்ததால், மனமுடைந்த சிறுமி வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் அவர், மீண்டும்வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில், கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று (நவ.,20) மாலை 6:30 மணியளவில் சென்னை சிறுவாபுரி முருகன் கோவில் பகுதியில் உள்ள ஒரு பூக்கடை அருகே சிறுமி அமர்ந்து அழுதுகொண்டிருந்தார். இதனை கண்ட பூ விற்பனை செய்த பெண் சிறுமியை அழைத்து விசாரித்தார். பின், அவரது மொபைல் போனில் இருந்து சிறுமி தனது பெற்றோரிடம் பேசினார். இது குறித்து கரிக்கலாம்பாக்கம் போலீசாருக்கு உடனே தகவல் தெரிவித்தனர். பூக்கடை பெண்ணிடம் போலீசார் பேசி சிறுமியை பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர். அதனை தொடர்ந்து கரிக்கலாம்பாக்கம் உதவி சப் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் பெற்றோருடன் காரில் சிறுவாபுரிக்கு சென்று, சிறுமியை மீட்டு இன்று இரவு புதுச்சேரிக்கு அழைத்து வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !