உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வு: புதுச்சேரி அரசு பள்ளிகள் அசத்தல்

10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வு: புதுச்சேரி அரசு பள்ளிகள் அசத்தல்

புதுச்சேரி:சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்கள் 99.79 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வில் புதுச்சேரி மாநிலத்தில் 122 அரசு பள்ளிகளில் இருந்து 5,594 மாணவர்கள் பங்கேற்றனர். இத்தேர்வின் முடிவு நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதில், 5,582 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, மாநிலத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தை 99.79 எட்டி, வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதுகடந்தாண்டைவிட 18.54 சதவீதம் கூடுதல் ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை