மேலும் செய்திகள்
கோவையின் தேவை! முதல்வரின் பார்வை
06-Nov-2024
அரசு விழா பாடலில் பிழை: ஸ்டாலின் அவசரம்
19-Oct-2024
துணை முதல்வர் அரசாணை மதிக்க வேண்டும்!
19-Oct-2024
புதுச்சேரி ; வரி பாக்கிக்காக அரசு இடத்தை ஏலத்திற்கு கொண்டு வருவது கண்டு அரசு வெட்கப்பட்டு தலை குனிய வேண்டும் என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: பா.ஜ., - என்.ஆர். காங்., கூட்டணி ஆட்சியில், அரசுக்கு சொந்தமான பல சொத்துக்கள் சட்ட விரோதமாக தனியாருக்கு விற்பனை செய்யப்படுகிறது. சிறப்பு பொருளாதார மண்டலத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், அங்குள்ள இடங்கள் ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்கள், வெளிமாநில தொழில் அதிபர்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது.கூட்டுறவு நூற்பாலைக்கு சொந்தமான, 4 ஏக்கர் நிலம் 'ஸ்பின்கோ' வாங்கிய கடனுக்காக தனியாருக்கு ஏலம் மூலம் தாரைவாக்கப்பட்டது.கரையாம்புத்துாரில் 'பாப்ஸ்கோ'விற்கு சொந்தமான, 55 சென்ட் நிலத்தில் பெட்ரோல் பங்க் இயங்கி வந்தது. சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தாமல் வரி பாக்கி, அதற்கு வட்டி என, 1 கோடியே 25 லட்சம் ரூபாய் செலுத்தவில்லை என்பதற்காக, 30 ஆயிரம் சதுர அடி இடம் வரும், 25ம் தேதி ஏலம் விடப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.அரசு இடத்தை விற்க கவர்னர், உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும். அரசு செலுத்த வேண்டிய வரி பாக்கிக்காக அரசு இடத்தை ஏலத்திற்கு கொண்டு வருவதற்கு இந்த அரசு வெட்கப்பட்டு தலைகுனிய வேண்டும். இதன் மீது கவர்னர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
06-Nov-2024
19-Oct-2024
19-Oct-2024