உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி அரசு பெண் ஊழியரிடம் ரூ.82.40 லட்சம் ‘அபேஸ்’

புதுச்சேரி அரசு பெண் ஊழியரிடம் ரூ.82.40 லட்சம் ‘அபேஸ்’

புதுச்சேரி: புதுச்சேரியில் போலி ஆன்லைன் பங்கு சந்தையில் முதலீடு செய்த பெண் அரசு ஊழியர் ரூ. 82.40 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்தார். புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் எழிலரசி, 52; அரசு ஊழியர். இவர் கடந்த 2025ம் ஆண்டு பேஸ்புக்கில் வந்த ஆன்லைன் பங்குசந்தை முதலீடு தொடர்பான விளம்பரத்தைப் பார்த்து, அதில் உள்ள லிங்கை கிளிக் செய்து, தனது விவரங்களைப் பதிவு செய்தார். இதையடுத்து, அவரது மொபைல் எண்ணை, மர்மநபர்கள் ஆன்லைன் பங்கு சந்தையில் முதலீடு செய்து, எப்படி திறமையாக சம்பாதிக்கலாம். அதிக லாபத்தை தரும் பங்குசந்தை நிறுவனங்கள் குறித்து தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் வாட்ஸ் அப் குரூப்பில் இணைத்துள்ளனர். அந்த, குரூப்பில் இருந்தவர்கள் தங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக லாபம் கிடைப்பதாக பதிவிட்டு ஆசையை துண்டியுள்ளனர். இதைநம்பிய அப்பெண், மர்மநபர்கள் தெரிவித்த ஆன்லைன் பங்குசந்தை லிங்கில் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி முதல் பிப்ரவரி 19ம் தேதி வரையில் பல்வேறு தவணைகளாக 82 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தார். அதன்மூலம் அவருக்கு பல கோடி ரூபாய் லாபம் வந்துள்ளதாக அவரது கணக்கில் காட்டியுள்ளது. இதையடுத்து, அந்த பணத்தை எடுக்க முயன்றபோது, கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகே, மோசடி கும்பலின் போலி பங்கு சந்தையில் முதலீடு செய்து பணத்தை இழந்தது தெரியவந்தது. இதுகுறித்து எழிலரசி அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை