உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  லாட்டரியில் பரிசு விழுந்ததாக புதுவை நபரிடம் பணம் மோசடி

 லாட்டரியில் பரிசு விழுந்ததாக புதுவை நபரிடம் பணம் மோசடி

புதுச்சேரி: ஆன்லைன் லாட்டரியில் 12 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக கூறி, புதுச்சேரி நபரிடம் சைபர் கிரைம் கும்பல், 21.61 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளது. புதுச்சேரி, முதலியார்பேட்டையை சேர்ந்தவர், 'வாட்ஸாப்'பில் வந்த விளம்பரத்தை பார்த்து, ஆன்லைன் கேரளா லாட்டரி டிக்கெட் வாங்கினார். இதையடுத்து, அவரை தொடர்பு கொண்ட மர்மநபர், கேரளாவில் இருந்து லாட்டரி ஏஜன்ட் பேசுவதாக கூறி, தாங்கள் வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு, 12 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். லாட்டரி பரிசு பணத்தை பெற ஜி.எஸ்.டி., மற்றும் டிபாசிட் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பிய அவர், மர்ம நபருக்கு, 21 லட்சத்து 61,916 ரூபாய் அனுப்பியுள்ளார். அதன்பின், அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதில், சைபர் மோசடி கும்பலிடம் தன் பணத்தை இழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !