உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி அருங்காட்சியகம் இரண்டாக பிரிகிறது! தொல்லியல் பொக்கிஷங்களுக்கு தனி இடம்

புதுச்சேரி அருங்காட்சியகம் இரண்டாக பிரிகிறது! தொல்லியல் பொக்கிஷங்களுக்கு தனி இடம்

புதுச்சேரி : புதுச்சேரி அருங்காட்சியகத்தை இரண்டாக பிரித்து விசாலமான இடங்களில் வைக்க கலை பண்பாட்டு துறை ரெடியாகி வருகின்றது. இது தொடர்பாக மத்திய அரசின் அனுமதிக்காக அணுகியுள்ளது.புதுச்சேரி அருங்காட்சியகம் செயிண்ட் லுாயி வீதியில் கடந்த 1983ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. தற்போது அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ள கட்டடம் நுாற்றாண்டு பழமை உடையது. இது கீழ்தளம் மற்றும் மேல்தளம் என இரு பகுதிகளை கொண்டுள்ளது.கீழ்தளத்தில் சிற்ப அரங்கு, தொல்லியல் பிரிவு, செப்பு திருமேனி, போக்குவரத்து, நாணயம் என முக்கிய பிரிவுகள் அமைந்துள்ளது.முதல் தளத்தில் பிரஞ்சியர் அரங்கு அமைந்துள்ளது. இந்த அரங்கு புதுச்சேரியை தவிர வேறு எங்கும் காண இயலாத ஒன்று. பிரஞ்சியர்கள் புதுச்சேரியில் வாழ்ந்த போது அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் இவ்வரங்கில் வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் லிஸ்ட் முதலிடத்தில் உள்ள புதுச்சேரி அருங்காட்சியகத்தை இரண்டாக பிரித்து விசாலமான இடங்களில் வைக்க கலை பண்பாட்டு துறை ரெடியாகி வருகின்றது. இது தொடர்பாக மத்திய அரசின் அனுமதிக்காக அணுகியுள்ளது.

தொல்லியல் பொருட்கள்

அருங்காட்சியகத்தின் ஒரு பிரிவு தற்போது ரோமண்ட் ரோலண்ட் வீதியில் உள்ள கலை பண்பாட்டு துறை இயக்குனர் அலுவலக கட்டடத்திற்கு செல்லுகின்றது.அங்குள்ள தற்போது இயங்கி வரும் கலை பண்பாட்டு துறை இயக்குனர் அலுவலகம் கடற்கரை சாலையில் உள்ள புதுமை கட்டடத்திற்கு இடமாறுகிறது. இங்கு புதுச்சேரியின் தொல்லியல் பொக்கி ஷயங்களாக உள்ள அனைத்து பழங்கால பொருட்களும் இடம் பெற உள்ளது.குறிப்பாக அரிக்கமேட் டில் கண்டெடுக்கப்பட்ட பலவகையான உள்நாட்டு பானை ஓடுகள், அலங்கார ஓடுகள், யவன மதுசாடிகள், சங்கு வளையங்கள்ல சங்கு, தந்தங்களான மணிகள், சங்கு வளையல்கள், சுடுமண் காதணிகள்,தொங்கல்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. முத்திரையர் பாளையம், பிள்ளையார்குப்பம், பாகூரில் கிடைத்துள்ள முதுமக்கள் தாழிகள், பெருங்கற்கால ஈமப் பானைகளும் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

கலை படைப்புகள்

தற்போது செயிண்ட் லுாயி வீதியில் உள்ள புதுச்சேரி அருங்காட்சிக கட்டடத்தில், முழுமுழுக்க பிரஞ்சிந்திய கலை பொருட்கள் இடம் பெற உள்ளது. குறிப்பாக 18-19 ம் நுாற்றாண்டுகளில் புதுச்சேரியில் வாழ்ந்த மக்களின் பிரஞ்சு நாகரித்தை பிரதிபலிக்கும் கலை பொருட்கள் இடம் பெற உள்ளது.குறிப்பாக 1673 முதல் 1953ம் ஆண்டு வரை புதுச்சேரியில் வாழ்ந்த பிரெஞ்சு இல்லங்களை அலங்கரித்த கலை பொருட்களுக்கு முக்கியத்துவம் கொண்டு வைக்கப்பட உள்ளது. பிரஞ்சு கவர்னர் துய்ப்ளே பயன்படுத்திய நாற்காலி, அவர் பயன்படுத்திய கட்டில் போன்ற வையும் இடம் பெற உள்ளது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி