தேசிய அளவிலான கராத்தே போட்டி புதுச்சேரி வீரர்கள் தேர்வு துவக்கம்
புதுச்சேரி: தேசிய அளவிலான கராத்தே போட்டியில் புதுச்சேரி கல்வித்துறை சார்பில் பங்கேற்க வீரர்கள் தேர்வு பணி நேற்று துவங்கியது.மத்திய அரசு சார்பில் தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கான தேசிய கராத்தே போட்டிகள் வரும் டிசம்பர் மாதம் பஞ்சாப் மாநிலம், லுாதியானாவில் நடக்கிறது. இப்போட்டியில் புதுச்சேரி அரசின் கல்வித்துறை சார்பில் பங்கேற்க வீரர்கள் தேர்வு முகாம் உப்பளம் ராஜிவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.மாநில கராத்தே சங்க தலைவர் இளங்கோவன், பொதுச் செயலாளர் வளவன் தலைமை தாங்கினர். கல்வித்துறை உடற்கல்வி இயக்குனர்கள் செல்வகுமார், மெர்லின் முன்னிலை வகித்தனர்.இதில், நடுவர்களாக மதிஒளி, சுந்தர்ராஜன், வெங்கடாஜலபதி, ஆறுமுகம், சங்கர், அமிர்தராஜ், அழகப்பன், குமரன், பாலசுந்தரம், சிவராஜ், சத்யநாதன், சுரேஷ், சத்தியசீலன், வினிதா, ஹரி, கஜலட்சுமி ஆகியோர் செயல்பட்டு வீரர்களை தேர்வு செய்தனர்.இத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.