உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பூர்வகுடி முதியோர்களுக்கு ரூ. 5 ஆயிரம் உதவி வழங்க மனு

பூர்வகுடி முதியோர்களுக்கு ரூ. 5 ஆயிரம் உதவி வழங்க மனு

புதுச்சேரி : பூர்வீக மக்களின் முதியோர்களுக்கு 5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என பூர்வீக மக்கள் நல பாதுகாப்புக்குழு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்குழுவின் தலைவர் அருள்ராஜ் தலைமையில் முதல்வரிடம் அளித்துள்ள மனு: புதுச்சேரியில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் குடும்பத்தினருக்கு 1962ம் ஆண்டு பிறப்பு சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு வம்சா வழியினருக்கு, ஏற்கனவே பிரெஞ்சு அரசு தந்தது போல், அரசு ஒரு பூர்வீக மக்கள் அடையாள அட்டை வழங்க வேண்டும். தற்போது முதியோர் உதவித்தொகையை 2 ஆயிரமாக உயர்த்த உள்ள அரசைப் பாராட்டுகிறோம். 1954ம் ஆண்டுக்கு முந்தைய காலத்தில், பிரெஞ்சு அரசின் சலுகைகளைப் புறக்கணித்து பூர்வீக மக்களின் முதியோர்களுக்கு 5 ஆயிரம் உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நவம்பர் 1ம் தேதியை சுதந்திர தினமாக அறிவித்து அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும். புதுச்சேரியின் தொன்மை வரலாறு, கலாசாரம், பண்பாடு, தியாகிகள் பற்றிய துணைப் பாடநூல் அச்சடிக்கப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும் 2ம் தேதி உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ