உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பேட்ரிக் பள்ளியில் மரம் நடும் விழா

பேட்ரிக் பள்ளியில் மரம் நடும் விழா

புதுச்சேரி : அன்னை தெரெசா பிறந்த நாளையொட்டி பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.பள்ளி துணை முதல்வர் அல்போன்ஸ் வரவேற்றார். பள்ளி தாளாளர் ரெஜிஸ் தலைமை தாங்கினார். இயக்குனர் லில்லி ரெஜிஸ், நிர்வாக அதிகாரி மார்ட்டின் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பூபதி சிறப்புரையாற்றி மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆசிரியை சித்ரா, முன்னாள் நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரிகள் முரளிதரன், செல்வம் எமில், சமுதாய நலப்பணித் திட்ட அதிகாரி சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி இளவழகன், பாலன், சரவணக்குமார் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்