உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொறியியல் படிப்புகளுக்கு 2ம் கட்ட கவுன்சிலிங் : இன்று துவங்கி 4 நாட்கள் நடக்கிறது

பொறியியல் படிப்புகளுக்கு 2ம் கட்ட கவுன்சிலிங் : இன்று துவங்கி 4 நாட்கள் நடக்கிறது

புதுச்சேரி : புதுச்சேரி பொறியியல் கல்லூரியில், பொறியியல் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், இன்று 9ம் தேதி துவங்கி நான்கு நாட்கள் நடக்கிறது. இன்று காலை 9 மணிக்கு துவங்கும் முதல் பிரிவு கவுன்சிலிங்கில் அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு எழுதிய 615 மாணவர்களும், 10 மணிக்கு துவங்கும் இரண்டாம் பிரிவில் 199 முதல் 194 வரை கட் ஆப் மதிப்பெண்கள் எடுத்த 149 புதுச்சேரி மாணவ மாணவிகள் பங்கேற்கின்றனர். பின், 11 மணிக்கு 193.667 முதல் 190.444 வரை, 12 மணிக்கு 190.333 முதல் 187.333 வரை, 2 மணிக்கு 187 முதல் 182.667 வரை, 3 மணிக்கு 182.333 முதல் 178.667 வரை, 4 மணிக்கு 178.333 முதல் 174.444 வரை கட் ஆப் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது. நாளை 10 ம்தேதி காலை 9 மணிக்கு 174.333 முதல் 169.667 வரை, 10 மணிக்கு 169 முதல் 165.667 வரை, 11 மணிக்கு 165.333 முதல் 161.667 வரை, 12 மணிக்கு 161.333 முதல் 158 வரை, 2 மணிக்கு 157.667 முதல் 153.667 வரை, 3 மணிக்கு 153.333 முதல் 150.167 வரை, 4 மணிக்கு 150 முதல் 146.667 வரை கட் ஆப் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. 12 ம்தேதி காலை 9 மணிக்கு 146.444 முதல் 142.333 வரை, 10 மணிக்கு 142.167 முதல் 138.667 வரை, 11 மணிக்கு 138.333 முதல் 135 வரை, 12 மணிக்கு 134.667 முதல் 131 வரை, 2 மணிக்கு 130.833 முதல் 126.667 வரை, 3 மணிக்கு 126.444 முதல் 122 வரை, 4 மணிக்கு 121.778 முதல் 116.333 வரை கட் ஆப் மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.13ம் தேதி காலை 9 மணிக்கு 116 முதல் 111.333 வரை, 10 மணிக்கு 111 முதல் 106.667 வரை, 11 மணிக்கு 106.333 முதல் 100.222 வரை, 12 மணிக்கு 100 முதல் 92.333 வரை, 2 மணிக்கு 92 முதல் 80 வரை கட் ஆப் மதிப்பெண்கள் எடுத்த மாணவர் களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை