உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / என்.ஆர்.காங்., கட்சிக்கு ஆதரவு விஸ்வகர்ம முன்னேற்ற கழகம் முடிவு

என்.ஆர்.காங்., கட்சிக்கு ஆதரவு விஸ்வகர்ம முன்னேற்ற கழகம் முடிவு

புதுச்சேரி : என்.ஆர்.காங்., கட்சிக்கு ஆதரவு அளிப்பது என விஸ்வகர்ம முன்னேற்ற கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.புதுச்சேரி விஸ்வகர்ம முன்னேற்ற கழக கூட்டம் தலைவர் சுப்ரமணி தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் சரவணன், கொள்கை பரப்பு செயலர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இந்திரா நகர் இடைத் தேர்தலில் என்.ஆர். காங்., வேட்பாளர் தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக வேலை செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. இணை தலைவர் ஆறுமுகம், இணை செயலாளர் ஜீவானந்தம், மடுகரை ஞானவேல், முத்துக்கிருஷ்ணன், ஊசுடு செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பொருளாளர் பெருமாள் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி