புதுச்சேரி வீரர்கள் மலேசியா பயணம்
பாகூர்: ஆசியா அளவிலான கனோ போலோ சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணி சார்பில் பங்கேற்கும், புதுச்சேரி வீரர்களை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். மலேசியாவில், ஆசியா அளவிலான 19வது கனோ போலோ சாம்பியன்ஷிப் போட்டி, வரும் 10ம் தேதி துவங்கி, 14ம் தேதி வரை நடக்கிறது. இதில், இந்திய அணி சார்பில், புதுச்சேரி வீரர்களான குருவிநத்தம் பெருமாள், சோரியாங்குப்பம் மலர்கொடி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இவர்களை வாழ்த்தி, வழியனுப்பும் நிகழ்ச்சி பாகூரில் நடந்தது. செந்தில்குமார் எம்.எல்.ஏ.,பங்கேற்று, மலேசியா செல்லும் வீரர் மற்றும் வீராங்கனையை, வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். புதுச்சேரி மாநில தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ஜெயபாலன், புதுச்சேரி மாநில ஒலிம்பிக் சங்க முதன்மை செயல் அதிகாரி முத்துகேசவலு மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்.