தீபாவளியால் மிரளும் புதுச்சேரி போலீசார்
சின்னஞ்சிறிய மாநிலமான புதுச்சேரியில், குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தனைக்கும், குறிப்பாக நகரப் பகுதியில் கூப்பிடும் தொலைவில் போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளது. இருந்தாலும், கொலை உள்ளிட்ட குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஒரு கொலை நடந்தவுடன், அடுத்தடுத்து கொலைகள் நடப்பதும், பண்டிகை நாட்களின் போது ரவுடிகளுக்குள் போட்டா போட்டியால் கொலைகள் நடப்பதும் புதுச்சேரியில் சர்வ சாதாரணமாகி விட்டது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் இரு வாரங்களுக்கு முன் உருளையன்பேட்டை, வில்லியனுார் மற்றும் லாஸ்பேட்டையில் அடுத்தடுத்து மூன்று ரவடிகள் கொல்லப்பட்டனர். இது தொடர் கொலையாக மாறிவிடுமோ என, புதுச்சேரி நகரப்பகுதி போலீசார் பீதியடைந்து, ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.