புதுச்சேரி போலீசார் சிரமதான பணி
புதுச்சேரி: கோரிமேட்டில் உள்ள புதுச்சேரி போலீஸ் வளாகத்தில், சிரமதானப் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. கோரிமேட்டில் புதுச்சேரி போலீசின் சைபர் கிரைம் பிரிவு, ஐ.ஆர்.பி.என். பிரிவு, போக்குவரத்து சீனியர் எஸ்.பி., அலுவலகம் உள்ளிட்ட முக்கிய பிரிவுகள் இயங்கி வருகிறது. இங்கு, நேற்று சிரமதான பணி மேற்கொள்ளப்பட்டது. போக்குவரத்து பிரிவு சீனியர் எஸ்.பி., நித்திய ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். போக்குவரத்து எஸ்.பி., ரச்சனா சிங், இன்ஸ்பெக்டர் நியூட்டன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த சிரமதானத்தில், புதுச்சேரி போலீஸ் சைபர் கிரைம், ஐ.ஆர்.பி.என்., போக்குவரத்து பிரிவு, கண்ட்ரோல் ரூம், வயலர்லெஸ் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அனைவரும் பங்கேற்று போலீஸ் வளாகத்தில் செடி, கொடிகளை அகற்றி துாய்மை பணியில் ஈடுபட்டனர்.