புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புதுச்சேரி தயார்; விடுதிகளில் அறைகள் ஹவுஸ்புல்
புதுச்சேரி : புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நட்சத்திர ஓட்டல்கள் துவங்கி, சாதாரண விடுதிகள் வரை, அறைகளின் முன்பதிவு முடிந்து விட்டது.புதுச்சேரி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது. இங்கு உலகம் முழுவதிலும் இருந்து, பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் குவிந்து, புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் தற்போதுபுதுச்சேரியில் உள்ள பெரும்பாலான விடுதிகளின் அறைகள் நிரம்பி விட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன்னரே, நட்சத்திர ஓட்டல்களில் சுற்றுலா பயணிகள் புத்தாண்டை கொண்டாடி மகிழ அறைகளை முன்பதிவு செய்து விட்டனர். அதேபோல, சாதாரண விடுதிகளிலும் அறைகளின் முன்பதிவுமுடிவடைந்து விட்டது.புதுச்சேரி ஓட்டல்கள் மற்றும் விடுதிகள் நிரம்பி விட்டதால், புத்தாண்டை கொண்டாட இங்குவரும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் கோட்டக்குப்பம், காலாப்பட்டு, அரியாங்குப்பம், வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம், நோனாங்குப்பம் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் உள்ள ஓட்டல்கள் மற்றும் விடுதிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.வரும், 31ம் தேதி இரவு, விடுதிகள், ஓட்டல்கள், ரெஸ்டோ பார்களில் உணவு, இசை, மது விருந்துகள், கலை நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள், மேஜிக் ேஷா ஆகியவை நடத்தப்பட உள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனையும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்து போலீசார் தொடர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி கடற்கரையில் வரும் 31ம் தேதி இரவு கூட்ட நெரிசல் இல்லாமல், சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.