ஏனாமில் கோ கோ போட்டி புதுச்சேரி மாணவருக்கு முதல் பரிசு
புதுச்சேரி: மாவட்ட அளவிலான கோ-கோ போட்டியில் முத்துரத்தினம் அரங்கம் பள்ளி மாணவர் முதல் பரிசு வென்றார். புதுச்சேரி மாநில விளையாட்டு துறை சார்பில் 17 வயதிற்குட்பட்ட மாவட்ட அளவிலான கோ- கோ போட்டி ஏனாமில் நடந்தது. இப்போட்டியில், ஆண்கள் பிரிவில் 8 அணிகள் கலந்து கொண்டன. இதில், 2வது மண்டல அணி சார்பில் பங்கேற்ற முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளி மாணவன் லோகநாதன் முதல் பரிசு வென்றார். மாணவர் லோகநாதன், கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் சுந்தர்ராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், துணை முதல்வர் சித்ரா உடனிருந்தனர்.