மேலும் செய்திகள்
தடகள நடுவர்களுக்கு புத்தாக்க பயிற்சி
17-Nov-2024
புதுச்சேரி; தென் மண்டல தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை அமைச்சூர் தடகள சங்க நிர்வாகிகள் பாராட்டினர். ஆந்திரா மாநிலம் குண்டூர் நாகர்ஜூனா பல்கலைக்கழகத்தில் 35வது தென் மண்டல தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த மாதம் நடந்தது. இதில், புதுச்சேரி அமைச்சூர் தடகள சங்கம் சார்பில் 45 மாணவர்கள், 44 மாணவியர் கலந்து கொண்டனர். இப்போட்டியில், 18 வயதிற்குட்பட்ட 100 மீட்டர், 200 மீட்டர் என இரு பிரிவுகளிலும் மதுமிதா 2ம் இடம் பிடித்தார்.இதேபோல், 16 வயதிற்குட்பட்ட நீளம் தண்டுதல் பிரிவில் விஜய் முதலிடம், உயரம் தாண்டும் பிரிவில் கேத்தரினா 2ம் இடம், திருக்குமரன் 600 மீட்டர் பிரிவில் மூன்றாம் இடம், 4X400 மீட்டர் ரீலே பிரிவில், தமிழரசி, பாரதி, வேலன், குணாளன் ஆகியோர் மூன்றாம் இடம், பிரியதர்ஷினி 20 வயதிற்குட்பட்ட பெண்கள் 3,000 மீட்டர் பிரிவில் மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்தனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பயிற்சியாளர் தமிழப்பன் ஆகியோரை தடகள சங்கத்தின் தலைவர் ராமலிங்கம், செயலாளர் கோவிந்தசாமி, பொருளாளர் ரகுராமன், பிரிதிவ் ராயர், சோமசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் பாராட்டினர்.
17-Nov-2024