உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தென் மாநில கோ - கோ போட்டி புதுச்சேரி அணி பங்கேற்பு

தென் மாநில கோ - கோ போட்டி புதுச்சேரி அணி பங்கேற்பு

புதுச்சேரி: தென் மாநிலங்களுக்கு இடையேயானா கோ - கோ போட்டியில் பங்கேற்க, புதுச்சேரி அணி கர்நாடகா புறப்பட்டது. கர்நாடக மாநிலம், தாவண்கிரேவில் நாளை 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை 3 நாட்கள், தென்மாநிலங்களுக்குஇடையே கோ - கோ போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் புதுச்சேரி மாநில பெண்கள் அணி கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இதற்காக அவர்கள் நேற்று புதுச்சேரியில் இருந்து கர்நாடகா புறப்பட்டனர். அவர்களை கழக செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில், அணியின் மேலாளர் ராம் மோகன்,பயிற்சியாளர் சத்தியா ஆகியோர் அழைத்து சென்றனர். வீராங்கனைகளை பயிற்சியாளர் சீனுவாசன், உடற்கல்வி ஆசிரியர்கள் துரை, ஜவகர், பத்மநாபன், சிங்காரவேலன் ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !