உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டி புதுச்சேரி அணி அபார வெற்றி

விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டி புதுச்சேரி அணி அபார வெற்றி

புதுச்சேரி : விஜய் ஹசாரே ஆடவர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி அணி அபார வெற்றி பெற்றது.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் விஜய் ஹசாரே கோப்பைக்கான ஆடவர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. அகமதாபாத் நகரில் நேற்று நடந்த போட்டியில் புதுச்சேரி அணி மற்றும் சவுராஷ்டிரா அணிகள் மோதின.முதலில் பேட் செய்த சவுராஷ்டிரா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 285 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஷெல்டன் ஜாக்சன் 71 ரன், சிராக் ஜனி 69 ரன் எடுத்தனர். அடுத்து ஆடிய புதுச்சேரி அணி 48.4 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 289 ரன்கள் எடுத்து, அபார வெற்றி பெற்றது.புதுச்சேரி அணியின் அஜய் ரோஹீரா 43 ரன், ஆகாஷ் கார்கவே 42 ரன், அங்கித் ஷர்மா 47 ரன், அருண் கார்த்திக் 73 ரன், அமன் கான் 28 பந்துகளில் 46 ரன் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.2 விக்கெட், 28 பந்துகளில் 46 ரன்கள் அடித்த அமன் கான் ஆட்டநாயகன் விருதை வென்றார். பலம் வாய்ந்த சவுராஷ்டிரா அணியை வென்று புதுச்சேரி அணி தனக்கென்று ஒரு இடத்தை பதிவு செய்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ