உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி அணிகள் வெற்றி

கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி அணிகள் வெற்றி

புதுச்சேரி: 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டங்களில் புதுச்சேரி மேற்கு, தெற்கு, வடக்கு அணிகள் வெற்றி பெற்றன. கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம் நிறுவனம் சார்பில், 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான 10 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த 7ம் தேதி துவங்கி சி.ஏ.பி., மைதானம் 4ல் நடந்து வருகிறது. புதுச்சேரி வடக்கு, தெற்கு, மேற்கு, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய 6 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.நேற்று (15ம் தேதி) காலை 10:00 மணிக்கு துவங்கிய போட்டியில் மாகே அணியும், புதுச்சேரி மேற்கு அணியும் மோதின. முதலில் ஆடிய மாகே அணி 10 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 123 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, ஆடிய மேற்கு அணி 9.3 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 127 எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேற்கு அணியின் விநாயகமுருகன் 3 விக்கெட் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.மதியம் 12:30 மணிக்கு நடந்த போட்டியில் தெற்கு அணியும், காரைக்கால் அணியும் மோதின. முதலில் ஆடிய காரைக்கால் அணி 10 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 79 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, ஆடிய புதுச்சேரி தெற்கு அணி 7.5 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 85 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 35 ரன்கள் மற்றும் 3 விக்கெட் எடுத்த தெற்கு அணியின் ராகேஷ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.மதியம் 3:00 மணிக்கு துவங்கிய போட்டியில் ஏனாம் அணியும், வடக்கு அணியும் விளையாடின. முதலில் ஆடிய வடக்கு அணி 10 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 90 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய ஏனாம் அணி 9 ஓவர்களில் 56 ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். வடக்கு அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 17 ரன்கள் மற்றும் 3 விக்கெட் எடுத்த வடக்கு அணியின் வீரர் ரமேஷ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ