மேலும் செய்திகள்
செய்தி சில வரிகளில்...விழுப்புரம்
07-Nov-2025
புதுச்சேரி: புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின், மாநிலக்குழு கூட்டம் அஜீஸ் நகர் அலுவலகத்தில் நடந்தது. தலைவர் கொளஞ்சியப்பன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சரவணன், துணைத் தலைவர் குப்புசாமி, இணை செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், அரிக்கிருஷ்ணன், நிர்வாகிகள் கார்க்கி விஜய், செங்குலத்தான் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், வில்லியனூர் பகுதியில் ஆதிதிராவிட நலத்துறையின் கிளை அலுவலகத்தை உடனடியாக அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த நிலையில் இருக்கும் ஆதி திராவிட மாணவர்களுக்கான விடுதிகளை சீரமைத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், வரும் டிசம்பர் 28ம் தேதி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுச்சேரி மாநில மாநாடு நடைபெற உள்ளதாகவும், இதில் முன்னணியின் அகில இந்திய தலைவர் ராதாகிருஷ்ணன் எம்.பி., பங்கேற்க உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
07-Nov-2025