குவாலிட்டி ஆர்கேட்டின் புதிய டைல்ஸ் ஷோரூம் திறப்பு விழா
புதுச்சேரி : இ.சி.ஆரில் குவாலிட்டி ஆர்கேட்டின் புதிய டைல்ஸ் ஷோரூமை முதல்வர் ரங்கசாமி நேற்று திறந்து வைத்தார்.புதுச்சேரி, ராஜிவ் சிக்னல் அருகே குவாலிட்டி ஆர்கேட்டின் புதிய 3 மாடி கொண்ட 2,5000 சதுர அடியில் டைல்ஸ் ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஷோரூமை முதல்வர் ரங்கசாமி நேற்று திறந்து வைத்தார்.விழாவில், மேலாண் இயக்குனர் ஆனந்த் கூறுகையில், 'இது புதுச்சேரி மற்றும் தென் ஆற்காடு மாவட்டத்தின் மிக பெரிய தரமான பிராண்டட் டைல்ஸ் ஷோரூம் ஆகும். இங்கு, 1,2000 சதுர அடியில் முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் கஜாரியா மற்றும் கெரோவிட் பிராண்டட் டைல்ஸ், 5,000 சதுர அடியில் சிம்போலா பிராண்டட் டைல்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் முதல் முறையாக இத்தாலியின் நெக்ஸியோன் மற்றும் டைமோரால் உலக தரமான டிசைனர் டைல்ஸ் அறிமுகப்படுத்தி உள்ளோம். எங்களின் அடுத்த கட்ட நகர்வாக புதிய பிராண்டட் வர்மோரா, சிமோரோ, கலர்டைல், மோட்டோ, கரோக்கே மற்றும் கஜாரியாவில் பல ரகங்கள், பல அளவுகளில், பல தரப்பட்ட ரசனைக்கு ஏற்ப பல்வேறு அளவுகளில் ஒரே இடத்தில் பார்த்து தேர்வு செய்யலாம்' என்றார். இயக்குனர் வெங்கடாசலபதி கூறுகையில், 'குவாலிட்டி ஆர்கேட்டின் 2014ம் ஆண்டு முதல் வாடிக்கையாளர்களின் அபிமான நிறுவனமாகும். தரமான டைல்ஸ் மற்றும் பாத்வேர் உபகரணங்களை சரியான விலையில், உலக தரத்தில் வழங்குவதே எங்கள் குறிக்கோள்' என்றார். இயக்குனர் ராமமூர்த்தி கூறுகையில், தற்போது வீடு கட்டுபவர்கள் ரசனைக்கு ஏற்ப உலகத்தரம் வாய்ந்த ஷாப்பிங் அனுபவத்துடன், உலகத்தரம் வாய்ந்த பிராண்டட் கொண்ட விசாலமான ஷோரூம், லிப்ட் மற்றும் கார் பார்கிங் வசதிகள் அமைந்துள்ளது' என்றார்.திறப்பு விழாவில், கவி பில்டர்ஸ் நிறுவனர் பாலசுப்ரமணியன், ஸ்டாண்டர்ட் அசோசியேஷன் பங்குதாரர்கள் ரங்கபாஷியம், சாம்பசிவம், பில்டர்ஸ் அசோசியேஷன் கடலுார், விழுப்புரம், சிதம்பரம், புதுச்சேரி நிர்வாகிகள், ரோட்டரி கிளப் பிரமுகர்கள், கட்டுமான பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.