உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரேபிஸ் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

ரேபிஸ் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

புதுச்சேரி: புதுச்சேரி பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கம், மத்திய விலங்குகள் நல வாரியம் ஆகியவை இணைந்து நடத்திய ரேபிஸ் தடுப்பு விழிப்புணர்வு பேரணி புதுச்சேரி கடற்கரை சாலையில் நேற்று நடந்தது.பேரணியை புதுச்சேரி சபாநாயகர் செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தார். லட்சுமி நாராயணா நர்சிங் கல்லுாரி முதல்வர் டாக்டர் ராஜலட்சுமி வரவேற்றார்.தொடர்ந்து கால்நடை துறை இணை இயக்குனர் டாக்டர் குமாரவேல் ரேபிஸ் நோய் விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார். மத்திய பிராணிகள் நல வாரிய கால்நடை மருத்துவர் செல்வமுத்து ரேபிஸ் நோயை எவ்வாறு தடுப்பது, தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கிப் பேசினார்.கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் கால்நடை செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.புதுச்சேரி தாசில்தார் அய்யனார் நன்றி கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ