உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராஜ சந்துரு அறக்கட்டளை இலவச காஸ் அடுப்பு வழங்கல்

ராஜ சந்துரு அறக்கட்டளை இலவச காஸ் அடுப்பு வழங்கல்

புதுச்சேரி: முத்தியால்பேட்டை தொகுதியில் ரேஷன் கார்டுக்கு ராஜ சந்துரு அறக்கட்டளை சார்பில், இலவச காஸ் அடுப்பு மற்றும் சேலை வழங்கப்பட்டது. இப்பணியை அறக்கட்டளை தலைவர் ராஜ சந்துரு துவக்கி வைத்தார். முதற்கட்டமாக 500 ரேஷன் கார்டுக்கு காஸ் அடுப்பு மற்றும் சேலை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ராஜ சந்துரு பேசுகையில், 'இது வெறும் அடுப்பும் சேலையும் அல்ல, இது ஒவ்வொரு வீட்டிற்கும் மரியாதை, நம்பிக்கை மற்றும் நிவாரணத்தை கொண்டு செல்லும் ஒரு சமூக பொறுப்பேற்பு. முத்தியால்பேட்டையின் ஒவ்வொரு குடும்பத்தையும் நாங்கள் கவனித்து கொள்கிறோம். இத்தகைய நலத்திட்டங்கள் தொடரும். இந்த விநியோகம் கட்டுப்பாடாக பல கட்டங்களாக நடைபெறும் என்பதுடன், ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரரும் முழுமையாக பயனடைவதை அறக்கட்டளை உறுதி செய்யும்' என்றார். நிகழ்ச்சியில், அறக்கட்டளை உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ