உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ராஜிவ் சதுக்கம் பிரீ லெப்டில் தடுப்புகள் அமைப்பு

 ராஜிவ் சதுக்கம் பிரீ லெப்டில் தடுப்புகள் அமைப்பு

புதுச்சேரி: ராஜிவ் சதுக்கம் பிரீ லெப்டில் போக்குவரத்தை சீரமைக்க வடக்கு போக்குவரத்து போலீசார் தடுப்புகள் அமைத்தனர். புதுச்சேரியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க வாகன ஓட்டிகள் சிக்னல்களை கடக்க மிகுந்த சிரமப்படுகின்றனர். சிக்னலில் இடது புறம் திரும்ப வேண்டிய வாகனங்கள் தடையின்றி செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்பது தான் போக்குவரத்து விதி. ஆனால், அந்தப் பாதையை ஆக்கிரமித்து கொண்டு வாகனங்களை குறுக்காக நிறுத்திவிடுவதால், மொத்த போக்குவரத்தும் சிக்னல்களில் தினமும் ஸ்தம்பித்து விடுகிறது. இதுகுறித்து கடந்த 19ம் தேதி தினமலரில் செய்தி வெளியானது. இந்நிலையில் நேற்று வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வேலையன் தலைமையில், போலீசார் ராஜிவ் சதுக்கத்தில் பிரீ லெப்டில் வாகன ஓட்டிகள் எளிதாக திரும்பும் வகையில் தடுப்புகளை அமைத்தனர். இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி பயனித்தனர். இது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோல், புதுச்சேரியில் உள்ள அனைத்து சிக்னல்களிலும் தடுப்புகளை அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை