உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வில்லியனுார் கோவிலில் ராம நவமி உற்சவம்

வில்லியனுார் கோவிலில் ராம நவமி உற்சவம்

புதுச்சேரி: வில்லியனூர் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் ராம நவமி உற்சவம் துவங்கியது.வில்லியனூரில் பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு ராம நவமி உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. வரும் 16ம் தேதி வரை 10 நாட்களுக்கு நடக்கும் இந்த திருவிழாவில் தினமும் காலையில், ராமர், சீதா, லட்சுமணர், அனுமன் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. மாலையில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி உள்புறப்பாடு நடக்கிறது.விழாவில் முக்கிய உற்சவமாக வரும் 10ம் தேதி சீதா - ராமர் திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து பல்வேறு உற்சவங்கள் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி டாக்டர் சந்தானராமன் மற்றும் பட்டாச்சாரியார்கள், ஊழியர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை