உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ராமலிங்கேஸ்வரர் கோவில் தேர் திருவிழா

 ராமலிங்கேஸ்வரர் கோவில் தேர் திருவிழா

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவில் தேர்திருவிழா வரும் 28ம் தேதி நடக்கிறது. நெட்டப்பாக்கம் கிராமத்தில் உள்ள பர்வத வர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த 17ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது. விழாவையொட்டி, வரும் 2ம் தேதி வரை தினமும் காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை மற்றும் இரவு பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. நேற்று இரவு மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. வரும் 26ம் தேதி பர்வத வர்த்தினி ராமலிங்கேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம், 28ம் தேதி காலை 7:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 2ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ