மேலும் செய்திகள்
மருத்துவமனையில் ரத்த தான முகாம்
26-Nov-2024
விக்கிரவாண்டி : அரியலுாரில் அரசு மருத்துவ மனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான அரிய வகை ரத்தம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது.அரியலுார் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணிக்கு அவசரமாக அரியவகை ரத்தமான 'பாம்பே ஓ ஹெச்'வகை ரத்தம் சிகிச்சைக்காக தேவைப்பட்டது.அரியலுார் மாவட்ட அரசு மருத்துவர்கள் வேண்டுகோளின்படி, விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கியிலிருந்து ஒரு யூனிட் ரத்தம் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.அரியலுாரில் ரத்தத்தை பெற்ற அரசு மருத்துவர்கள், தேவையான நேரத்தில் மகப்பேறு பெண்ணிற்கு செலுத்தினர். நேற்று அதிகாலை அந்த பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்தது.
26-Nov-2024