உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாதானுார் பள்ளியில் வாசித்தல் திருவிழா

வாதானுார் பள்ளியில் வாசித்தல் திருவிழா

புதுச்சேரி: வாதானுார், அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளியில்,  மாணவர்களுக்கான வாசித்தல் திருவிழா நடந்தது. தலைமை ஆசிரியர் வீரய்யன் வாசித்தல் திருவிழாவை துவக்கி வைத்தார். ஆசிரியர் மகேஸ்வரி வரவேற்றார். ஆசிரியர் பாலகுமார் தொகுத்து வழங்கினார். விழாவில், தொடக்கப்பள்ளி மாணவர்கள் கற்றல் உபகரணங்களைக் கொண்டு, ஆங்கில வார்த்தைகளை வாசிக்கும் திறனை வெளிப்படுத்தினர். மேலும், பொறுத்து அட்டைகளைக் கொண்டு வார்த்தை விளையாட்டுகளை பொருத்தி காண்பித்தனர். விழாவில், திரளான பெற்றோர்கள் பங்கேற்று,  மாணவர்களின் வாசித்தல் படைப்புகளை பார்வையிட்டனர். ஆசிரியர் ஓம் சாந்தி நன்றி கூறினார்.  ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சுஜாதா, ஆஷா நந்தினி, அகல்யா ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !