உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கந்த சஷ்டி பாராயணம்

 கந்த சஷ்டி பாராயணம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில கந்த சஷ்டி பாராயணக் குழு சார்பில் உலக நன்மைக்காக கந்த சஷ்டி பாராயணம் இசையுடன் பாடும் 170வது மாத நிகழ்வு நேற்று நடந்தது. தட்டாஞ்சாவடி ஐய்யனாரப்பன் கோவில் நடந்த நிகழ்வுக்கு, கந்த சஷ்டி பாராயண குழு தலைவர் சீனு மோகன் தாஸ், பங்கேற்ற அனைவருக்கும் கந்த சஷ்டி பாராயணம் புத்தகம் வழங்கி, கந்த சஷ்டி பாராயணத்தை துவக்கி வைத்தார். முன்னதாக, சரவணேஸ்வர சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதில், கந்த சஷ்டி பாராயணக் குழுவை சேர்ந்தவர் 36 முறை கந்த சஷ்டி பாராயணத்தை பாடி வழிபாடு நடத்தினர். ஏற்பாடுகளை நிறுவனர் முருக பாபுஜி செய்திருந்தார். பாராயணத்தில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த பாராயணம் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து இடைவிடாது நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !