உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரெட்டி நல சங்க தலைவர் ஓ.பி.ஆர். சிலைக்கு மரியாதை

ரெட்டி நல சங்க தலைவர் ஓ.பி.ஆர். சிலைக்கு மரியாதை

திண்டிவனம் : ஒமந்துாரிலுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பி.ஆர்.சிலைக்கு தமிழ்நாடு ரெட்டி நலச் சங்க மாநில தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பி.ராமசாமி ரெட்டியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, திண்டிவனம் அடுத்த ஓமந்துாரில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு, தமிழ்நாடு ரெட்டி நலச்சங்க மாநில தலைவர் ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில், தென்னிந்திய ரெட்டி நலச் சங்க தலைவர் முத்துமல்லா, தொழிலதிபர் ராஜ்மோகன், விழுப்புரம் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், சென்னை முத்தமிழ்செல்வி, மாநில தலைவர் ராமச்சந்திரன், துணைத் தலைவர் சண்முகையா, பொதுச் செயலாளர் ராஜா பூர்ணசந்திரன், பொருளாளர் அருண்குமார், இளைஞரணி மாநில தலைவர் வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ், விழுப்புரம் வடக்கு மாவட்ட உயர்மட்டக்குழு ரமணன், பேராசிரியர் ராமசீனுவாசன், ஸ்ரீராம் பள்ளி தாளாளர் முரளிரகுராமன், புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் அசோக்பாபு, சிவசங்கர், கவுன்சிலர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ