மேலும் செய்திகள்
மத்திய அமைச்சருக்கு ஆசி வழங்கிய முதல்வர்
06-Jan-2025
புதுச்சேரி: புதுச்சேரியில் விஷ வாயு தாக்கி உயிரிழந்த பெண்ணின் கணவரிடம், ரூ.20 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.ரெட்டியார்பாளையம், புது நகரில் கடந்தாண்டு வீட்டு கழிவறையில் விஷவாயு தாக்கி, 3 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி அங்கு சென்று அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து, உரிய நிவாரணம் வழங்கப்படும் என, உறுதி அளித்தார்.இந்நிலையில் விஷ வாயு தாக்கி உயிரிழந்த காமாட்சியின் கணவர் தேவராஜிடம், தனது நிவாரண நிதியில் இருந்து முதல்வர் ரங்கசாமி ரூ.20 லட்சத்திற்கான காசோலையை சட்டசபையில் நேற்று வழங்கினார்.
06-Jan-2025