உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முழியன்குளத்தில் சீரமைப்பு பணி துவக்கம்

முழியன்குளத்தில் சீரமைப்பு பணி துவக்கம்

அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அருகே 400 ஆண்டுகள் பழமையான முழியன்குளம் 1 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் பகுதியில், 400 ஆண்டுகள் பழமையான குடிநீர் ஆதாரமாக விளங்கிய முழியன்குளம் பராமரிப்பு இல்லாமல் கிடந்தது. இந்த இடத்தை சீரமைப்பதற்கு, தனசுந்தரம்பாள் சாரி டபுள் சொசைட்டி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் முயற்சி எடுத்தனர். அதனையடுத்து, இந்தியன் வங்கி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் சி.எஸ்.ஆர்., நிதி பங்களிப்புடன் 1 கோடி மதிப்பீட்டில், குளத்தை சீரமைத்து, படித்துறை அமைக்கும் பணி நேற்று துவங்கியது.சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சபாநாயகர் செல்வம், பணியை துவக்கி வைத்தார். ஆனந்தன் வரவேற்றார். கோவில் நிர்வாகி பாஸ்கர், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில், சுப்புரமணி, பிரபாகரன், புரு ேஷாத்தமன், தசரதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தன்னாலர்வலர் மணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை