உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தினக்கூலி ஊழியர்களாக பணியமர்த்த கோரிக்கை

தினக்கூலி ஊழியர்களாக பணியமர்த்த கோரிக்கை

புதுச்சேரி: ஒப்பந்த தொழிலாளராக பணி புரிந்து வருபவர்களை தினக்கூலி ஊழியர்களாக பணியமர்த்த வேண்டும் என, கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய ஊழியர்கள் சங்கம், அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.சங்கத்தின் சார்பில், அரசுக்கு வைத்துள்ள கோரிக்கை:கட்டட நலவாரியத்தில் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை 11 ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். நலவாரியத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஒப்பந்த ஊழியர்கள் இடைவெளியில்லாமல் தொடர்ந்து 16 ஆண்டுகள் பணி செய்து வருகின்றனர். அவர்களை தினக்கூலி ஊழியர்களாக பணியமர்த்த வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை