உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தமிழக சட்டசபை தேர்தலையொட்டி விடுமுறை அளிக்க கோரிக்கை

 தமிழக சட்டசபை தேர்தலையொட்டி விடுமுறை அளிக்க கோரிக்கை

புதுச்சேரி: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, வரும் 23ம் தேதி புதுச்சேரிக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி விடுது்துள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கல்லுாரியில் மருத்துவம், பொறியியல் படிக்கின்றனர். அதேப்போல் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அதிக அளவில் பணிபுரிவதால் அவர்கள் ஓட்டளிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் வரும் 23ம் தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தலில் ஓட்டளிக்க ஏதுவாகவும், நுாறு சதவீத ஓட்டுப் பதிவு என்ற நோக்கத்திலும் புதுச்சேரி அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை