/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி - விழுப்புரம் மார்க்கத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
புதுச்சேரி - விழுப்புரம் மார்க்கத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
புதுச்சேரி: புதுச்சேரி - விழுப்புரம் மார்க்கத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதச்சேரி, கவுண்டன்பாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் குமார், தமிழக மற்றும் புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர்களுக்கு அனுப்பியுள்ள மனு: புதுச்சேரி, விழுப்புரம் இடையே தினசரி ஆயிரக்கணக்கானோர் பஸ்களில் பயணிக்கின்றனர். இந்நிலையில் பழைய வழிதடத்தில் செல்ல ஒன்றரை மணி நேரமாகிறது. புறவழிச்சாலை மார்க்கத்தில் குறைந்த நேரத்தில் செல்ல முடிகிறது. ஆனால், புறவழிச்சாலை மார்க்கத்தில் ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ள இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கினால், மக்கள் சிரமமின்றி பயணிக்க முடியும். எனவே, கூடுதல் பஸ்களை இயக்க இரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.