உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மரப்பாலம் - முள்ளோடை சாலையை விரைந்து சீரமைக்க கோரிக்கை

 மரப்பாலம் - முள்ளோடை சாலையை விரைந்து சீரமைக்க கோரிக்கை

புதுச்சேரி: மரப்பாலம் முதல் முள்ளோடை வரை பழுதடைந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என, பங்காரு வாய்க்கால் நீர் ஆதார கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து கூட்டமைப்பின் தலைவர் சந்திரசேகர் கவர்னருக்கு அனுப்பியுள்ள மனு: மரப்பாலம் முதல் முள் ளோடை வரையிலான சாலை பயணம் செய்ய முடியாத அளவிற்கு சேதம டைந்து மோசமாக உள்ளது. சாலை முழுதும் பெயர்ந்து கிடக்கும் சிறு கற்கள் இரு சக்கர வாகனங்களில் செல் வோருக்குப் பெரும் அச்சு றுத்தலாக உள்ளது. இதனால் இருசக்கரவாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து காயமடைகின்றனர். சாலையை பராமரிக்க வேண்டிய பொதுப்பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் இது குறித்த புகார்களை காது கொடுத்துக் கேட்பதாக தெரியவில்லை. அரசு, எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காப்பது மக்களின் உயிரோடு விளையாடும் செயலாகும். எனவே, கவர்னர் தலையிட்டு, மரப்பாலம் முதல் முள்ளோடை வரை பழுதடைந்துள்ள சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ