உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க ஐ.ஜே.கே., மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்

 விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க ஐ.ஜே.கே., மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்

வேப்பூர்: பாசாரில் நடந்த ஐ.ஜே.கே., மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்; பொய் வாக்குறுதிகளால் ஆட்சியை கைப்பற்றி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதை கலாசாரம், நிர்வாக சீர்கேடு ஆகியவற்றுடன் ஊழல் மலிந்த ஆட்சியை நடத்துகின்ற தி.மு.க., அரசை வன்மையாக கண்டிப்பது. நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க., அரசை அகற்றி விட்டு பிரதமர் மோடியின் வழிகாட்டுதல்படி அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் என்.டி.ஏ., கூட்டணியின் ஆட்சி அ மைய வேண்டும். இந்தியாவில் பிறந்த அனைவரும் சமம். அதனால், சிறுபான்மையினர் மைனாரிட்டி என்ற சொற்றொடரில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மைனாரிட்டி என்ற சொல்லை சட்டபூர்வமாக நீக்க தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பில் அளிக்கும் முன்னுரிமை இட ஒதுக்கீடு, இனி ஜாதி, மதம் அடிப்படையில் அளிக்காமல், பொருளாதார அடிப்படையில் அளிக்க வேண்டும். விருத்தாசலம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை