உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சில்லரையில் விற்பனை செய்த ரெஸ்டோ பாருக்கு சீல்

சில்லரையில் விற்பனை செய்த ரெஸ்டோ பாருக்கு சீல்

நெட்டப்பாக்கம் : பண்டசோழநல்லுாரில் சில்லரை விற்பனையில் மதுபானம் விற்ற ரெஸ்டோ பாருக்கு கலால் துறை அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.நெட்டப்பாக்கம் தொகுதி பண்டசோழ நல்லுார் கிராமத்தில் (கல்யாண்ஸ்) எனும் தனியார் ரெஸ்ட்ரோ பார் கடந்த ஒரு வருடமாக இயங்கி வருகிறது. இந்த ரெஸ்டோ பாரில் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து மது குடிக்க லைசென்ஸ் கலால் துறை வழங்கியுள்ளது. ஆனால் இந்த ரெஸ்ட்ரோ பாரில் சில்லரை விற்பனை நடந்து வருவதாகவும், இந்த ரெஸ்ட்டோ பாரில் மது வாங்கி கொண்டு வெளியில் உள்ள காலி மனைகளில் மது அருந்துவதாக கலால் துறைக்கு புகார் சென்றது.இதையடுத்து கலால் துறை தாசில்தார் ராஜேஷ் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை 11:00 மணியளவில் பண்டசோழநல்லுாரில் இயங்கி வரும் ரெஸ்ட்ரோ பாரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரெஸ்ட்டோ பாரில் சில்லரை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பாருக்கு கலால் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை