மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி
16-Dec-2024
இறந்த வாலிபர் யார்: போலீஸ் விசாரணை
26-Nov-2024
திருக்கனுார்: வீட்டில் திடீரென மயங்கி விழுந்து ஓய்வு பெற்ற ஜிப்மர் ஊழியர் இறந்தார்.திருக்கனுார் பேட், பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பக்கிரி, 66. ஓய்வு பெற்ற ஜிப்மர் மருத்துவமனை ஊழியர். கடந்த சில மாதங்களாக உடல்நிலைப் பாதிக்கப்பட்டிருந்த பக்கிரி, நேற்று முன்தினம் திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார்.இதையடுத்து, அவரது மகன் அகிலன், பக்கிரியை மீட்டு மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்திற்கு அழைத்து சென்றார். பின்னர், மேல் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, டாக்டர் பிரிசோதனை செய்து, பக்கிரி இறந்து விட்டதாக தெரிவித்தார்.இதுகுறித்து அகிலன் அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
16-Dec-2024
26-Nov-2024