ஓய்வுபெற்ற ஆசிரியர் மயங்கி விழுந்து சாவு
புதுச்சேரி: திண்டிவனம், செஞ்சி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தாமரைக் கண்ணன், 69; ஓய்வு பெற்ற தனியார் பள்ளி ஆசிரியர். கடந்த 10 நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த செந்தாமரைக் கண்ணனை, மனைவி கற்பகம், மகள் சசிரேகா ஆகியோர் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர் குடலில் பிரச்னை இருப்பதாகக் கூறி, உள்நோயாளியாகச் சேர்த்து சிகிச்சை பெறும்படி அறிவுறுத்தினார். சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவு செய்த செந்தாமரைக் கண்ணன் மீண்டும் வீட்டிற்கு செல்ல புதுச்சேரி புதிய பஸ் நிலையத்திற்கு வந்தனர். திண்டிவனம் பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்தபோது, செந்தாமரைக் கண்ணன் திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாகத் தெரிவித்தார். புகாரின் பேரில், உருளையன் பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.