மேலும் செய்திகள்
ரகளை செய்தவர் கைது
12-Jun-2025
புதுச்சேரி: புதுச்சேரியில், பொது இடத்தில் குடித்துவிட்டு ரகளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். லாஸ்பேட்டை போலீசார் சாமிபிள்ளை தோட்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மது குடித்துவிட்டு பொது இடத்தில் ரகளை செய்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், லாஸ்பேட்டை வள்ளலார் நகரை சேர்ந்த ராஜசேகர், 33, என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். அதே போல, முத்தியால்பேட்டை தலவீரசாமி தெருவில், பொது இடத்தில் ரகளை செய்த, தபாலி, 44 , என்பவரை முத்தியால்பேட்டை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, இ.சி.ஆர்., சாலையில், ரகளை செய்த குறிஞ்சி நகரை சேர்ந்த பிரகாஷ், 24, என்பவரை, கோரிமேடு போலீசார் கைது செய்தனர்.
12-Jun-2025