உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்

சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி எம்.ஜி., சாலையில் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றினர்.புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து அதிகமான பகுதிகளில் சாலையின் நடுவே கடை பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது.போக்குவரத்து கிழக்கு இன்ஸ்பெக்டர் நாகராஜ் எஸ்.பி., தலைமையில், போக்குவரத்து போலீசார், மகாத்மா காந்தி சாலையின் இருபுறங்களில் வைத்துள்ள கடை பேனர்கள், சாலையோர துணி கடைகளை அதிரடியாக நேற்று அகற்றினர். கடை பேனர்களை சாலையோரங்களில் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கடை உரிமையாளர்களை எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ