சாலை மேம்படுத்தும் பணி
திருபுவனை : செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்று மேம்பாலத்தில் இருந்து, வடக்கே பம்பை ஆற்றுப் பாலம் வரை 1.14 கோடியே 57 ஆயிரம் ரூபாய் செலவில் சாலையை மேம்படுத்தும் பணி துவங்கியது. நிகழ்ச்சிக்கு, திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ., அங்காளன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட செயற் பொறியாளர் ராதா கிருஷ்ணன், உதவி பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் ஹரிராம் முன்னிலை வகித்தனர்.செல்லிப்பட்டு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.